search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்"

    அரையிறுதி லெக் 2-ல் அயாக்ஸ் அணியை 3-2 என வீழ்த்தி, அவே கோல்ஸ் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். #UCL
    யூரோ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டி ஒன்றில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் - அயாக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த வாரம் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் அயாக்ஸ் 1-0 என வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 2-வது லெக்கில் அயாக்ஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

    சொந்த மைதானத்தில் அயாக்ஸ் அணி உத்வேகத்துடன் விளையாடியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும் ஈடுகொடுத்து விளையாடியது.

    ஆனால் சொந்த மைதான ரசிகர்கள் ஆதரவால் அயாக்ஸ் சிறப்பான தொடக்கம் கண்டது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் அயாக்ஸ் அணியின் மத்திஜ்ஸ் டி லிக்ட் முதல் கோலை பதிவு செய்தார். 35-வது நிமிடத்தில் ஹகிம் ஜியெச் கோல் அடித்தார். இதனால் அயாக்ஸ் முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. முதல் லெக்கில் ஏற்கனவே ஒரு கோல் அடித்திருந்ததால் ஒட்டுமொத்தமாக 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    இதனால் அயாக்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி வீரர்கள் வீறுகொண்டு எழுந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    குறிப்பாக லூகாஸ் மவுரா ஆட்டத்தில் அனல் பறந்தது. லூகாஸ் 55-வது நிமிடத்திலும், 59-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அயாக்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் அயாக்ஸ் அணி சுதாரித்துக் கொண்டு மேலும் கோல் ஏதும் வாங்காத அளவிற்கு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.



    இதனால் 90 நிமிடம் முடிவில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. காயம் மற்றும் ஆட்டம் தடை ஆகியவற்றை கணக்கிட்டு இன்ஜூரி நேரம் கொடுக்கப்பட்டது. போட்டி முடியும் 6-வது நிமிடத்தில் லூகாஸ் ஹாட்ரிக் கோல் அடிக்க டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 3-2 என வெற்றி பெற்றது.

    இரண்டு லெக்கையும் சேர்த்து ஆட்டம் 3-3 என சமநிலைப் பெற்றாலும், வெளிமைதான கோல்கள் (Away Goals) விதிப்படி டோட்டன்ஹாம் அயாக்ஸ் மைதானத்தில் 3 கோல்கள் அடித்ததால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    வாரத்திற்கு ஒரு லட்சம் பவுண்டு சம்பளம் அடிப்படையில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் உடனான ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டித்தார் டேல் அலி. #DeleAlli
    இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியின் முன்னணி பிட்பீல்டராக திகழ்பவர் டேல் அலி. 22 வயதே ஆன இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதி வரை செல்ல இவரது ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

    டேல் அலி கடந்த 2015-ல் இருந்து இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் அணியான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இளம் வயதிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவரை நீண்ட காலமாக தக்கவைக்க டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி விரும்பியது.



    இதுதொடர்பாக டேல் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் டேல் அணி தனது ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டித்துள்ளார். டேல் அணி ஏற்கனவே வார்திற்கு 50 ஆயிரம் பவுண்டு சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது அது ஒரு லட்சம் பவுண்டாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இங்கிலாந்து அணி கேப்டனான ஹாரி கேன்-ஐ 2 லட்சம் பவுண்டிருக்கிற்கு டோட்டன்ஹாம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×